கூடவே இருக்கும் கொரோனா: வர்த்தகங்கள் தயாராக வேண்டும்

கூடவே இருக்கும் கொரோனா: வர்த்தகங்கள் தயாராக வேண்டும்

1 mins read
5cae84d6-f3b5-4130-97f8-7b206734c62f
-

கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளும் சூழலை நோக்கி சிங்கப்பூர் மாறும் வேளையில் இங்குள்ள வர்த்தகங்கள் அதற்குத் தயாராக வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

தகுதிபெறும் ஊழியர்கள் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள உதவுதல், விரைவு கிருமிப் பரிசோதனைகளை வேலை நடைமுறைகளில் ஒரு பகுதியாக சேர்த்தல், நீக்குப்போக்கான வேலைமுறையைத் தொடர்தல் ஆகியவற்றை வர்த்தகங்கள் செய்ய வேண்டும் என்று திரு கான் இன்று (ஜூலை 26) தமது அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது கூறினார்.

பாதுகாப்புப் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது உணவு, பானம், அழகுநிலையம், உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றுக்கான தேவை அதிகமாகும் என்றார் அவர். அதிகமான ஊழியர்களும் வேலையிடத்துக்குத் திரும்பக் கூடும். தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத ஊழியர்களை அதிக நோய் தொற்று அபாயம் இல்லாத சூழல்களுக்கு முதலாளிகள் மாற்றவேண்டும் என்று அமைச்சர் கூறினார்.