தென்-கிழக்கு ஆசியாவுக்கு வரும் ஆஸ்டின்

2 mins read
9423e147-a534-477e-84aa-2c0be1432eb1
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்­சர் லாயிட் ஆஸ்­டின், தென்-கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவைப் பலப்படுத்துவதற்காக நேற்று தமது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அமைச்சர் ஒருவர் இவ்வட்டாரத்துக்கு வருவது இதுவே முதல் முறை.

சீனா தனது ஆதிக்­கத்தை விரிவு­டுத்தி செல்வாக்கைப் பெருக்கி வரும் வேளை­யில் வட்­டார நாடு­க­ளு­டன் உற­வைப் பலப்­ப­டுத்­திக் கொள்ள அமெ­ரிக்கா விரும்­பு­கிறது. இதன் ஒரு பகு­தி­யாக அமைச்­சர் லாயிட் ஆஸ்­டி­னின் பய­ணம் இடம்­பெ­று­கிறது.

அமெ­ரிக்கா தனது தேசிய பாது­காப்­புக் கொள்­கை­யில் சீனா­வின் சவால்­களை எதிர்­கொள்­வ­தில் முக்­கிய கவ­னம் செலுத்தி வரு­கிறது.

பெய்­ஜிங்­கு­ட­னான போட்­டியை இந்த நூற்­றாண்­டின் மிகப்­பெ­ரிய சோதனை என்றும் பைடன் நிர்­வா­கம் கரு­து­கிறது. திரு பைடன் அதி­ப­ரா­கப் பொறுப்பு ஏற்று ஆறு மாத­மான நிலை­யில் பைட­னின் உத்­தியை அறிந்துகொள்ள தென்-கிழக்கு ஆசிய நாடு­கள் காத்­துக் கிடக்­கின்­றன. பொரு­ளி­யல், வர்த்­த­கம், இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­து­டன் ராணுவ ஈடு­பாடு போன்­ற­வற்­றில் அமெ­ரிக்­கா­வின் பங்கு குறித்­தும் வட்­டார நாடு­கள் ஆர்­வ­மு­டன் எதிர்பார்க்கின்றன.

இந்த நிலையில் அலாஸ்­கா­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்சர் ஆஸ்­டின், பங்­கா­ளித்­து­வம் மற்­றும் பங்­கா­ளித்­து­வத்­தின் முக்கியத்துவம் பற்றி விைரவில் தெரிந்­து­கொள்­வீர்­கள் என்­றார்.

"உற­வைப் பலப்­ப­டுத்­து­வதே என்­னு­டைய இலக்கு," என்­று அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் இன்று முக்­கிய உரை­யாற்­ற­வி­ருக்­கும் திரு ஆஸ்­டின், தென்­சீ­னக் கட­லில் சீனாவின் ஆதிக்­கம் பற்றி பேசு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பின்­னர் வியட்­னாம், பிலிப்­பீன்­சில் நடை­பெ­றும் சந்­திப்­பு­களில் அவர் பங்­கேற்­கி­றார்.தென்­சீ­னக் கடற்­ப­கு­தியை சுதந்­தி­ர­மா­க­வும் வெளிப்­ப­டை­யா­க­வும் வைத்­தி­ருப்­ப­தன் அவ­சி­யத்­தை­யும் தனது பய­ணத்­தில் அமைச்­சர் ஆஸ்­டின் எடுத்­து­ரைக்­க­வி­ருக்­கி­றார்.