கட்டுப்பாட்டை நீக்கியதற்கான விளக்கம் தர அரசாங்கம் மறுப்பு

1 mins read
9c8e69f7-142f-4b80-a4b4-01f6000f5c39
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கட்­டுக்­க­டங்­கா­மல் பரவி வரு­கிறது. இந்­நி­லை­யில் அந்­நாட்டு அர­சாங்­கம் அதிர்ச்­சி­க­ர­மான ஓர் அறி­விப்­பைக் கடந்த வாரம் அறி­வித்­தி­ருந்­தது. அதா­வது, இது­வ­ரை­யி­லும் நடப்­பில் இருந்த தொற்­றுக்கு எதி­ரான கட்­டுப்­பா­டு­கள் மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அந்­நாடு கடந்த வாரம் அறி­வித்­தி­ருந்­தது. அர­சாங்­கத்­தின் அதி­ர­டி­யான இந்த அறி­விப்பு அங்கு பெரிய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இதற்கு அர­சாங்­கம் சரி­யான விளக்­கம் தர வேண்­டும் என்று நேற்று நடந்த நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் தெரி­வித்­த­னர்.

ஜன­நா­யக செயல் கட்­சி­யின் துணைத்­த­லை­வர் கோபின் சிங் டியோ, "அர­சாங்­கம் இந்­தக் கட்­டுப்­பா­டு­களை விலக்­கிக் கொள்­வது குறித்து எங்­க­ளுக்கு ஏன் முன்­ன­தாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அந்­தக் கட்­டுப்­பாட்டு நடை­மு­றை­கள் எப்­போ­தில் இருந்து விலக்­கிக் கொள்­ளப்­பட்­டது. இது யாரு­டைய முடிவு? சட்­டத்­திற்­குட்­பட்டு எடுக்­கப்­பட்ட முடிவா? இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் விலக்­கிக்­கொள்­ளப்படு­வ­தால் நாட்டு மக்­கள் பரந்த அள­வில் எவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­வர்? என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

மலே­சி­யா­வில் தொற்­றுக்கு எதி­ரான அவ­ச­ர­நிலை கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்­ட­போது அங்கு தின­சரி சரா­சரி தொற்று எண்­ணிக்கை வெறும் 3,000 ஆக இருந்­தது. ஆனால் இப்­போது 14,000 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­லை­யில் திடீ­ரென கட்­டுப்­பா­டு­களை விலக்­கிக்­கொள்­வ­தாக அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது மக்­க­ளி­ட­மும் அந்­நாட்டு எதிர்க்­கட்­சி­யி­ன­ரி­ட­மும் பெரிய சர்ச்­சை­யாக வெடித்­துள்­ளது.