அமெரிக்காவில் மணற்புயல்: விபத்தில் சிக்கி 8 பேர் பலி

லாஸ் ஏஞ்­சல்ஸ்: அமெ­ரிக்­கா­வின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள யூட்டா மாநி­லத்­தில் உள்ள பாலை­வன விரை­வுச்­சா­லை­யில் நேற்று வீசிய கடு­மை­யான மணற்புய­லில் சிக்கி எட்­டுப் பேர் மாண்­ட­னர்.

விரை­வுச்­சா­லை­யில் சென்­று­கொண்­டி­ருந்த வாக­னங்­கள் ஒன்­றோ­டொன்று மோதிக்­கொண்ட விபத்­து­களில் இவர்­கள் கொல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

மாண்­ட­வர்­களில் குழந்­தை­களும் அடங்­கு­வர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் உள்­ள­தாக அந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

யூட்டா மாநி­லத்­தின் சால்ட் லேக் சிட்­டிக்­குத் தெற்கே 242 கி.மீ. தொலை­வில் ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த விபத்­தில் மொத்­தம் 22 வாக­னங்­கள் ஒன்­றோ­டொன்று மோதிக்­கொண்­டன என்று உத்தா மாநி­லத்­தின் பொது பாது­காப்­புத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தில் வாக­னங்­கள் மோதிக்­கொண்டு சாலை­களில், வாக­னங்­களில் உதி­ரிப்­பா­கங்­கள் சித­றிக்­கி­டந்­ததை அந்­தச் சாலை­யில் நக­ர­மு­டி­யா­மல் மணிக்­கணக்­கில் காத்­தி­ருந்த வாக­னங்­களில் இருந்த சிலர், படம்­பி­டித்து சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

அவற்­றில் ஒரு படத்­தில், ஒரு சிவப்பு நிற கார், பெரிய கன­ரக வாக­னத்­தில் மோதி, அதன் முன்­பகுதி நசுங்­கி­ய­வாறு செங்­குத்­தாக நிற்­பது போன்ற ஒரு காட்­சி­யைக் காண­மு­டிந்­தது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து கருத்­துத் தெரி­வித்த யூட்டா மாநி­லத்­தின் ஆளு­நர் ஸ்பென்­சர் கோக்ஸ், இந்­தக் கொடூ­ர­மான விபத்து மிகப்­பெ­ரிய வருத்­தத்­தைத் தந்­துள்­ளது என்று கூறி­னார்.

இந்த விரை­வுச்­சா­லைப் பகு­தி­யில் மணல் புயல் என்­பது வழக்­க­மானது என்­ப­தால் அவ்­வப்­போது வானிலை நிலை­யம், இது குறித்து எச்­ச­ரிக்கை விடுக்­கும். அது­போன்று அந்த வட்­டா­ரத்­தில் 50 கி.மீ. வேகத்­தில் பலத்த காற்று வீசும் என கடந்த ஞாயிற்­றுக்­கிழமை நண்­ப­க­லில் வானிலை நிலை­யம் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!