செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7bea2651-8b4a-4c22-a608-be3ed9f8e405
-

டுட்டர்டே: தொற்றை துடைத்தொழித்து

நாட்டின் பொருளியலை மீட்டெடுப்பேன்

மணிலா: கொவிட்-19 தொற்றை முற்­றி­லு­மா­கத் துடைத்­தொ­ழித்து பிலிப்­பீன்­சைக் காப்­பாற்­றப்­போ­வ­தாக அந்­நாட்டு அதி­பர் டுட்­டர்டே நேற்று முன்­தி­னம் உறு­தி­ய­ளித்­துள்­ளார். அத்­து­டன் தொற்­றால் படு­பா­தா­ளத்­தில் வீழ்ச்சி கண்­டுள்ள நாட்­டின் பொரு­ளி­யலை தூக்கி நிறுத்­து­வ­தற்­கான பல திட்­டங்­கள் வைத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

இவற்றை தனது கடை­சி­யாண்­டுப் பத­விக் காலத்­திற்­குள் செய்­து­முடிக்­கப்­போ­வ­தாக அவர் சூளு­ரைத்­துள்­ளார். போதைப்­பொ­ருள், குற்­றச்­செ­யல்­கள், ஊழல் போன்­ற­வற்றை ஒழிப்­பேன் என்று நான் அளித்த வாக்­கு­று­தி­க­ளைக் காப்­பாற்­றி­விட்­டேன். அது­போல் இந்த முறை கொவிட்-19 தொற்றை முற்­றி­லு­மா­கத் துடைத்­தொ­ழித்து பொரு­ளி­யல் மீட்சி காண வழி வகுப்­பேன் என்று கூறி­யுள்­ளார். பிலிப்­பீன்­சில் தொற்­றால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை 1.6 மில்­லி­யனை நெருங்­கி­யுள்­ளது. இது­வரை தொற்­றால் 27,000 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர். தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளி­லேயே கொவிட்-19 இரண்­டா­வது அலை­யால் பிலிப்­பீன்ஸ்­தான் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டது.

அமெரிக்காவுக்கு புதிய சீனத் தூதர்

பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மோசமடைந்திருக்கும் இவ்வேளையில் அமெரிக்காவுக்கான புதிய தூதராக திரு கின் காங் என்பவரை, சீனா அறிவிக்கவுள்ளது.

தற்போது அமெரிக்காவில் சீனாவின் தூதராக உள்ள 68 வயது திரு குய் டியாங்க் ஓய்வுபெறுவதால் திரு கின் அந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. திரு குய், அமெரிக்காவில் சீனத் தூதராகப் பதவியேற்று கடந்த மாதத்தோடு எட்டு ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. புதிதாகப் பதவியேற்கவிருக்கும் திரு கின், சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சராவார். இவருக்கு அமெரிக்கா தொடர்பான விவகாரங்களில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லை என்று கூறப்படுகிறது.

தென்கொரியா - வடகொரியா நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடித் தொலைத்தொடர்பு

சோல்: வடகொரியா, தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுத்து, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் இணக்கம் கண்டுள்ளன என்று அந்நாட்டின் கேசிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது. அந்த வகையில் அந்த இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான நேரடித் தொலைத்தொடர்புக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளன. அந்தத் தொடர்பு நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் நடப்புக்கு வந்ததாக அந்த ஊடகம் தெரிவித்தது. தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களின் அடிப்படையின் அந்த இரண்டு தலைவர்களும் மீண்டும் தங்களுக்கிடையேயான தொலைத்தொடர்பை நடைமுறைக்குக் கொண்டுவர இணங்கியுள்ளனர்.