சிட்னியில் முடக்கநிலை நீட்டிப்பு

சிட்னியில் முடக்கநிலை நீட்டிப்பு

2 mins read
63a62102-e67a-4353-81be-07aa8de8f7c9
-

சிட்னி: சிட்­டி­னி­யைத் தலை­ந­க­ரா­கக் கொண்ட நியூசவுத்­வேல்ஸ் மாநி­லத்­தில் தொற்­றுக்கு எதி­ரான முடக்­க­நி­லையை அம்­மா­நி­லம் மேலும் நான்கு வாரங்­க­ளுக்கு நீட்­டித்­துள்­ளது. ஏற்­கெ­னவே நடப்­பில் இருந்த முடக்­க­நிலை நாளை­யு­டன் முடி­வ­டைய இருந்த நிலை­யில், அம்­மா­நில அர­சாங்­கம் இந்த நீட்­டிப்பை அறி­வித்­துள்­ளது.

அம்­மா­நி­லத்­தில் கடந்த சில நாட்­க­ளாக தின­சரித் தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. செவ்­வாய்க்­கி­ழமை கிடைத்த தரவு­க­ளின் அடிப்­ப­டை­யில் தின­சரி சமூ­கத் தொற்­றுப் பாதிப்பு 172ஐ எட்­டி­யுள்­ளது. டெல்டா வகை உரு­மாற்­றக் கிரு­மியே பர­வ­லுக்கு முக்­கிய கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அதிக மக்­கள் தொகையைக் கொண்ட நியூ­ச­வுத்­வேல்ஸ் மாநி­லத்­தில், டெல்டா வகை உரு­மா­றிய கிரு­மித் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன. இருந்­தும் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் அம்­மா­நி­லம் திணறி வரு­கிறது.

தற்­போது எடுக்­கப்­பட்­டுள்ள புதிய நட­வ­டிக்கை நல்ல பல­னைத் தரும் என்­றும் விரை­வில் தொற்று எண்­ணிக்கை குறை­யும் என்றும் சுகா­தா­ரத்­துறை நிபு­ணர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

சிட்­னி­தான் மிக­வும் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சென்ற ஆண்டு கொரோனா கிரு­மித்­தொற்­றின் முதல் அலை தாக்­கம் தொடங்­கி­ய­தில் இருந்து இங்கு தொற்­றுக்கு எதி­ரான முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­ட­தோடு கொரோனா கிரு­மித்­தொற்­றுச் சோத­னை­களும் முடுக்­கி­வி­டப்­பட்­டன. இருந்­தும் நாளுக்கு நாள் தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரு­கிறது. முடக்­க­நி­லையை அடுத்து பள்­ளி­கள், அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பணி­யி­டங்­கள், கட்­டு­மா­னங்­கள் ஆகி­யவை மூடப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி நியூ­ச­வுத்­வேல்ஸ் மாநி­லத்­தில் இரண்டு தொற்று மர­ணங்­கள் பதிவு­செய்­யப்­பட்­டன. 46 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். 169 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.