இந்தியாவில் முதன்முதலாக 2020ல் கொவிட்-19 கிருமித்தொற்று கேரள மாநிலத்தில்தான் தலைகாட்டியது.
அந்த மாநிலத்தில் அதுமுதல் கொரோனா கிருமி முற்றிலும் ஒடுங்குவதற்கான அறிகுறிகள் இன்றுவரை தெரியவில்லை.
நாட்டில் மூன்றாவது அலைக்கான மையமாக கேரளா உருவெடுக்கக்கூடும் என்று அச்சப்படும் அளவுக்கு அந்த மாநிலத்தில் தொற்று தொடர்ந்து இப்போது அதிகமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் வார இறுதி நாட்களில் முழுமுடக்கம் நடப்புக்கு வருகிறது. இதன்படி, நாளை மறுநாளும் ஆகஸ்ட் 1ஆம் தேதியும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
(இச்செய்தியின் விரிவாக்கம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)

