கட்டுமானத் தளத்தில் விபத்து; வெளிநாட்டு ஊழியர் மரணம்

கட்டுமானத் தளத்தில் விபத்து; வெளிநாட்டு ஊழியர் மரணம்

1 mins read
11e983d6-71f9-4657-8b58-c3165b86e316
சிலாங்கூரில் பண்டார் புக்கிட் டிங்கியில் இந்த விபத்து நிகழ்ந்தது. படம்: தி ஸ்டார் -

மலேசியாவில் இலகு ரயில் கட்டுமானத் தளத்தில் சாரக்கட்டு சரிந்ததில் பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்.

இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிலாங்கூரில் பண்டார் புக்கிட் டிங்கியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மலேசியாவில் இவ்வாண்டு நிகழ்ந்த 5வது கட்டுமானத் தள விபத்து இது.

விபத்துகளைத் தடுக்க சோதனைகள் தீவிரமாக்கப்படும் என்று மலேசிய அதிகாரிகள் உறுதி கூறியுள்ள நிலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் இடிபாடுகளிலிருந்து பங்ளாதேஷ் ஊழியரின் உடல் மீட்கப்பட்டது என்று மலேசிய தீ, மீட்பு துறையை மேற்கோள்காட்டி 'தி ஸ்டார்' நாளேடு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்