அதிகரிக்கும் தொற்று; ஜப்பான் நிைலமை மோசம்

அதிகரிக்கும் தொற்று; ஜப்பான் நிைலமை மோசம்

1 mins read
03398b9c-c916-4e9e-9575-f92382f501bb
-

தோக்­கியோ: தோக்­கியோ ஒலிம்­பிக்­கில் பங்­கேற்­ப­தற்­காக வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த இரு­வர், கிரு­மித்­தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டு உள்ள­தாக தோக்­கியோ 2020 ஒலிம்பிக் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஒலிம்­பிக் விளை­யாட்­டால் கொவிட்-19 தொற்று மற்ற இடங்­க­ளுக்­கும் பரவி ஜப்­பா­னிய மருத்­துவக் கட்­ட­மைப்­புக்கு பெரும் பிரச்­சினை ஏற்­ப­டும் என்று அஞ்சப் படுகிறது.

இந்த நிலை­யில் ஒலிம்­பிக் விளை­யாட்­டில் மேலும் இரு­வர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இரு­வ­ரின் உடல்­நிலை சீராக உள்­ளது. மூன்­றா­வது நபர் சிகிச்சை முடிந்து திரும்­பி­விட்­டார் என்று பேச்­சா­ளர் மாசா டாகாயா தெரி­வித்­தார்.

தொற்று அதி­க­ரித்­துள்­ள­தால் தலை­ந­க­ர­மான தோக்­கி­யோ­வில் அவ­ச­ர­நிலை அமலில் உள்ளது. புதிதாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­ரங்­களை ஒலிம்பிக் ஏற்பாட் டாளர்கள் வெளி­யி­ட­வில்லை. ஒலிம்­பிக் தொடர்­பில் நேற்று 24 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இவர்­களில் இருவர் விளை­யாட்டு வீரர்­கள் என்று நம்பப்படுகிறது.

இம்மாதம் முதல் தேதி­யி­லி­ருந்து இதுவரை 193 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டுள்ளனர்.