பாரிஸ்: பிரான்சில் கேஃபே செல்வதற்கு, விமானத்தில் ஏறுவதற்கும் ரயிலில் பயணம் செய்யவும் சுகாதாரச் சீட்டு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் 9 முதல் நடப்புக்கு வருவதால் அதிகாரிகள் அதற்குரிய ஏற் பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இது தொடர்பான மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிரான்சில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆனால் கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு இதுவே சிறந்த வழி என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் சோதனையில் தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் இந்த சுகாதாரச் சீட்டு வழங்கப்படுகிறது.

