'சிட்னி முடக்கநிலைக்கு தடுப்பூசி தீர்வாகாது'

'சிட்னி முடக்கநிலைக்கு தடுப்பூசி தீர்வாகாது'

2 mins read
1dad2f5c-64be-4cc3-b51f-38c5a57b911c
சிட்னியில் பிளாக்டவுன் வட்டாரத்தில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டடத்துக்கு அருகே மக்கள் நடமாட்டத்தைக் காவல்துறையினர் கண்காணிக்கின்றனர். கிருமித்தொற்று அதிகரித்துள்ளதால் சிட்னி நகரம் முடக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

சிட்னி: சிட்­னி­யில் கிரு­மித்­தொற்று உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யி­ருப்­ப­தால் அந்­ந­க­ரம் மேலும் ஒரு மாதம் முடக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் தடுப்­பூ­சி­யால் மட்­டும் முடக்­க­நிலை முடி­வுக்கு வராது என்று ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டின் ஆகப்­பெ­ரிய நக­ர­மான சிட்­னி­யில் உரு­மா­றிய டெல்டா கிரு­மி­யால் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இது குறித்து பேசிய திரு மோரி­சன், "தடுப்­பூசி போடு­வதை வேகப்­ ப­டுத்த முடி­யும். சிட்னி முடக்­கப்­பட்டு தடுப்­பூ­சி­யும் போடு­வ­தால் தொற்று மேலும் பர­வா­மல் தடுக்க முடி­யும். அதற்கு என்­னால் உதவி செய்ய முடி­யும். ஆனால் தடுப்­பூசி மட்­டுமே முடக்­க­நி­லையை முடி­வுக்கு கொண்டு வராது," என்­றார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அதிக மக்­கள் தொகை கொண்ட மாநி­ல­மாக நியூ சவுத் வேல்ஸ் உள்­ளது. நேற்று இந்த மாநி­லத்­தில் கிரு­மித்­தொற்று புதிய உச்­சத்­தைத் தொட்­டது.

அன்று ஒரு நாள் மட்­டும் 239 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இதற்கு முந்­தைய நாளன்று 177 பேருக்கு தொற்று ஏற்­பட்­டது.

சிட்­னி­யில் முடக்­க­நிலை நீட்­டிக்­கப்­பட்டு தொற்று ஏற்­ப­டக்­கூ­டிய மோச­மான இடங்­களில் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களைத் தீவி­ர­மா­கப் பின் பற்­றி­னால் டெல்டா கிரு­மியை கட்­டுக்­குள் கொண்­டு­வர முடி­யும் என்று திரு மோரி­சன் குறிப்­பிட்­டார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் 16 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் 17 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே இது­வரை தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.

தலை­ந­க­ர­மான சிட்­னி­யில் தொற்று அதி­க­ரித்துள்ளைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி­யி­லி­ருந்து அந்­ந­க­ரம் முடக்­கப்பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டில் இது­வரை இந்த மாநி­லத்­தில் 2,500க்கும் மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்­டுள்ளனர். 165 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

56 பேர் தீவிர சிகிச்சைப் பிரி­வில் உள்­ள­னர். அவர்­களில் 22 பேருக்கு சுவா­சக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.