தாய்லாந்து, கம்போடியாவுக்கு 2.5 மி. தடுப்பூசிகளை அனுப்பிய அெமரிக்கா

தாய்லாந்து, கம்போடியாவுக்கு 2.5 மி. தடுப்பூசிகளை அனுப்பிய அெமரிக்கா

1 mins read
f6cdb964-6433-4b7a-bea8-415870363aa9
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னின் நிர்­வா­கம் தனது கையி­ருப்­பில் உள்ள தடுப்­பூ­சி­களை உலகம் முழு­வ­தும் உள்ள நாடு­க­ளுக்கு நன்­கொ­டை­யாக வழங்கி வரு­கிறது.

இதன் ஒரு பகு­தி­யாக தாய்­லாந்து, கம்­போ­டி­யா­வுக்கு மில்­லி­யன் கணக்­கான முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சி­களை அமெ­ரிக்கா அனுப்­பி­வைத்­துள்­ளது.

சென்ற புதன்­கி­ழமை அன்று 1.5 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய ஃபைசர் தடுப்­பூ­சி­கள் தாய்­லாந்­துக்கு அனுப்பிவைக்­கப்­பட்­டன. இவை வெள்­ளிக்­கி­ழமை (இன்று) தாய்­லாந்து வந்து சேரும் என்று வெள்ளை மாளிகை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

உல­க­ளா­விய கோவாக்ஸ் திட்­டத்­தின் ஓர் அங்­க­மாக மேலும் 1.06 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய ஜான்­சன் அண்ட் ஜான்­சன் தடுப்­பூ­சியை கம்­போ­டி­யா­வுக்கு அமெ­ரிக்கா அனுப்­பி­யது.

வெள்­ளிக்­கி­ழமை, சனிக்­கி­ழமை ஆகிய இரு நாட்­களில் இரு விமா­னங்­களில் இந்­தத் தடுப்­பூ­சி­கள் கம்­போ­டி­யா­வுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

திரு பைடனின் நிர்­வா­கம், 80 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய ஃபைசர், மொடர்னா, ஜான்­சன் அண்ட் ஜான்­சன் தடுப்­பூ­சி­களை உலக நாடு­க­ளுக்கு விநி­யோ­கித்து வரு­கிறது.

உலகம் முழு­வ­தும் குறைந்­தது 580 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சி­களை வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும்.