பெகாசஸ் விவகாரத்தை விசாரித்து வருகிறோம்: இஸ்ரேலிய அமைச்சர்

பெகாசஸ் விவகாரத்தை விசாரித்து வருகிறோம்: இஸ்ரேலிய அமைச்சர்

1 mins read
7d28fe88-d2b1-47ca-a20e-2a5074da0cd8
-

பாரிஸ்: பிரான்ஸ், இந்­தியா உட்­பட பல நாடு­களில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பெகா­சஸ் உளவு விவ­கா­ரத்தை விசா­ரித்து வரு­கி­றோம் என்று இஸ்­ரே­லிய தற்­காப்பு அமைச்­சர் பென்னி கான்ட்ஸ் தெரி­வித்­துள்­ளார்.

பிரஞ்சு தற்­காப்பு அமைச்­ச­ரான ஃபுளோரன்ஸ் பார்­லி­யைச் சந்­தித்த அவர், பெகா­சஸ் விவ­கா­ரத்தை மிக­வும் தீவி­ர­மா­கக் கரு­து­வ­தா­கவும் சொன்னார். இஸ்­ரே­லின் 'என்­எஸ்ஓ' என்ற நிறு­வ­னம் உரு­வாக்­கிய 'பெகா­சஸ்' மென்­பொ­ருள் மூலம் பிரஞ்சு அதி­பர் இம்­மா­னு­வேல் மேக்­ரோ­னும் இதர பிரஞ்சு அதி­கா­ரி­களும் உளவு பார்க்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. பய­னீட்­டா­ள­ருக்­குத் தெரி­யா­ம­லேயே கைத்­தொ­லை­பே­சி­யில் உள்ள கேமரா, மைக் ஆகி­ய­வற்றை அந்த மென்­பொ­ரு­ள் இயக்க முடி­யும்.

தொலை­பேசி உரை­யா­டல்­க­ளை­யும் அது பதிவு செய்­யக்கூடியது.

"குற்­றச் செயல்­க­ளை­யும் பயங்­ க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளை­யும் தடுப்­ப­தற்­காக மட்டும் இணை­யத் தொடர்­பான மென்­பொ­ருளை ஏற்று மதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

"அர­சாங்க அதி­கா­ரி­கள் இன்று என்­எஸ்ஓ அலு­வ­ல­கத்­துக்­குச் சென்­ற­னர். இது குறித்து தீவி­ர­மாக விசா­ரிக்­கப்­படுகிறது," என்று அமைச்சர் பென்னி கான்ட்ஸ் மேலும் கூறினார்.