கொவிட்-19 கட்டுப்பாடுகள்: சிட்னியில் ராணுவ வீரர்கள்

2 mins read
18721043-0118-457f-97d4-e35dae0425af
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் கொவிட்-19 முடக்­க­நிலை கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் உத­வு­வ­தற்­காக ராணுவ வீரர்­களை ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

கடந்த ஐந்து வாரங்­க­ளாக முடக்­க­நிலை நடப்­பில் இருந்­தா­லும் டெல்டா வகை கிரு­மித்­தொற்று கார­ண­மாக சிட்­னி­யில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை சற்­றும் குறை­ய­வில்லை என்­ப­தால் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிட்­னி­யில் தற்­போ­தைய முடக்­க­நிலை ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று 170 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். முந்­தைய நாள் இந்த எண்­ணிக்கை 239ஆக இருந்­தது.

இந்­நி­லை­யில், வரும் திங்­கட்­

கி­ழமை முதல் சுமார் 300 ஆஸ்­தி­ரே­லிய ராணுவ வீரர்­கள் முடக்­க­நி­லையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான சுற்­றுக்­கா­வல் பணி­யில் காவல்­து­றை­யி­ன­ருக்கு உத­வு­வர்.

அதற்கு முன் அவர்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு சுற்­றுக்­கா­வல் குறித்து பயிற்சி அளிக்­கப்­படும்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­கள் தங்­க­ளது இடத்­தில் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­களா என்­பதை வீடு வீடாக சென்று உறுதி செய்ய போலி­சா­ருக்கு ராணுவ வீரர்­கள் உத­வு­வார்­கள் என்­றார் நியூ சௌத் வேல்ஸ் போலிஸ் ஆணை­யர் மிக் ஃபுல்லர்.

10 கி.மீ. பயண வரம்பு உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­க­ளை­யும் மக்­கள் பின்­பற்­று­கி­றார்­களா என்­ப­தை­யும் அவர்­கள் உறுதி செய்­வார்­கள்.

சிட்னி முழு­வ­தும் போலி­சா­ரும் ராணுவ வீரர்­களும் இந்த பணியை மேற்­கொள்­வார்­கள் என்­றா­லும் கிரு­மிப் பர­வல் புதி­தாக தலை­தூக்­கி­யுள்ள எட்டு மாவட்­டங்­களில் அவர்­கள் அதிக கவ­னம் செலுத்­து­வார்­கள் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, முடக்­க­நி­லைக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் சிட்­னி­யில் இன்று மேலும் ஆர்ப்­பாட்­டத்­திற்­குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் யாரும் கலந்­து­கொள்ள வேண்­டாம் என்­றும் கிரு­மித் தொற்றை தாங்­க­ளா­கவே போய் தேடிக் கொள்ள வேண்­டாம் என்­றும் நியூ­சௌத் வேல்ஸ் மாநில முதல்­வர் கிளா­டிஸ் பெரெ­ஜிக்­லி­யன் எச்­ச­ரித்­துள்­ளார்.

இத­னி­டையே, ஆஸ்­தி­ரே­லிய மக்­கட்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வு­டன், பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்­கும் என்­றும் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தவிர்க்­கப்­படும் என்­றார் ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன். தகுதி பெறும் அனை­வ­ருக்­கும் இவ்­வாண்டு இறு­திக்­குள் தடுப்­பூசி போடப்­படும் என்­றும் அவர் சொன்னார்.