'வூஹானுக்குப் பிறகு மிகவும் தீவிரமான கிருமிப் பரவல்'

'வூஹானுக்குப் பிறகு மிகவும் தீவிரமான கிருமிப் பரவல்'

2 mins read
6149cfd3-40ed-4bdf-ad0e-ec51cbe0fd61
-

சீனாவின் நான்சிங்கில் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பு

ஷாங்­காய்: சீனா­வில் அண்­மைய கிரு­மிப் பரவல் நான்­சிங் நக­ரில் தொடங்கி, பெய்­ஜிங் உள்­ளிட்ட 13 நக­ரங்­க­ளுக்­குப் பர­வி­யுள்­ளதை, வூஹா­னுக்­குப் பிறகு மிக­வும் தீவி­ர­மான கிரு­மிப் பர­வல் என்று உள்­ளூர் ஊட­கங்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

சீனா­வில் நேற்று பதி­வான 64 தொற்று சம்­ப­வங்­களில் 13 நாஞ்­சிங் நக­ரில் பதி­வா­னவை. தொற்று முத­லில் கண்­ட­றி­யப்­பட்ட ஜூலை 20ஆம் தேதிக்­குப் பிறகு அங்கு இது­வரை 184 பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். வேகமாக கிருமிப் பரவுவதற்கு டெல்டா வகை தொற்றே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

தொற்றுக்கு ஆளானவர்களில் 52 பேருக்கு டெல்டா வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.­

ஹூனான், பெய்­ஜிங் உள்­ளிட்ட சில நக­ரங்­களில் குறைந்­தது ஒரு­வ­ரா­வது தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சில நக­ரங்­களில் திரை­ய­ரங்­கு­கள், பூங்­காக்­கள் மூடப்­பட்­டன. மக்­கள் பெரு­ம­ள­வில் ஒன்­று­கூ­டும் நிகழ்ச்­சி­கள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

ரஷ்­யா­வில் இருந்து நான்­சிங் லுகோ அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்­குச் சென்ற விமா­னத்­தைச் சுத்­தம் செய்த ஊழி­யர்­க­ளி­டம் முத­லில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அங்கு அனைத்து விமா­னங்­களும் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

சுகா­தார நட­வ­டிக்­கை­களை துப்­பு­ரவு பணி­யா­ளர்­கள் பின்­பற்­ற­வில்லை என்று ஸின்­ஹுவா செய்தி கூறு­கிறது.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­களா, இல்­லையா என்ற விவ­ரம் தெரி­ய­வில்லை என்றாலும் டெல்டா வகை தொற்­றுக்கு எதி­ராக சீன தடுப்­பூ­சி­யின் செயல்­பாடு குறித்து சீன சமூக ஊட­கங்­களில் கேள்வி எழுந்­துள்­ளது.