நியூயார்க்: அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக இந்த நூற்றாண்டில் சுமார் 83 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது ஜெர்மனியின் மக்கள்தொகைக்கு ஈடாகும்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் எர்த் கழகம் அந்த ஆய்வை மேற்கொண்டது.
இதன்படி 2100ஆம் ஆண்டு வாக்கில் கிரகத்தின் வெப்பநிலை 4.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், ஏழ்மையான, அதிக வெப்பமான நாடான ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்கிறார் ஆய்வை வழிநடத்திய ப்ரெஸ்லர்.

