தோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் தோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், மேலும் 4 நகரங்களுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சைதமா, கனகவா, சிபா, ஒசாகா ஆகிய நகரங்களில் ஆகஸ்ட் 2 முதல் 31ஆம் தேதி வரை அவசரநிலை கடைப்பிடிக்கப்படும் என பிரதமர் சுகா அறிவித்துள்ளார்.
"தோக்கியோ, மேற்கு பெருநகரப் பகுதிகளில் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய வேகத்தில் நோய்த்தொற்று பரவி வருகின்றது," என்று தெரிவித்த பிரதமர் சுகா, "இதே வேகத்தில் கிருமிப் பரவல் அதிகரித்தால் ஜப்பானின் மருத்துவக் கட்டமைப்பு சீர்குலைந்துவிடும்," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தோக்கியோவைச் சுற்றியுள்ள ஹொக்கைடோ, கியோட்டோ, ஹியோகோன் டி ஃபுகுயோகா உள்ளிட்ட 5 நகரங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் நேற்று ஆக அதிகமாக 10,743 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அவர்களில் தோக்கியோவில் தொற்றுக்கு ஆளான 3,300 பேருக்கு அடங்குவர்.

