மியன்மாரில் பாதி பேர் தொற்றுக்கு ஆளாவர்: எச்சரிக்கும் பிரிட்டன்

மியன்மாரில் பாதி பேர் தொற்றுக்கு ஆளாவர்: எச்சரிக்கும் பிரிட்டன்

1 mins read
0bc64f50-dcf1-41db-aa6e-7f2f8d189ea8
கிருமித் தொற்றால் மாண்ட ஒருவரைச் சுமந்து செல்லும் தொண்டூழியர்கள். படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: அடுத்த இரண்டு வாரத்­திற்­குள் மியன்­மா­ரின் மக்­கட்

­தொ­கை­யில் பாதி பேர் கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­வர் என்று பிரிட்­டன் ஐக்­கிய நாடு­கள் சபையை எச்­ச­ரித்­துள்­ளது.

பிப்­ர­வ­ரி­யில் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தி­லி­ருந்து மியன்­மா­ரில் மோச­மான கிரு­மிப் பர­வல் நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக பிரட்­டன் கூறி­யது.

கிரு­மித்தொற்­றுக்கு எதி­ராக பாது­காப்­பாக தடுப்­பூசி போடு­வ­தற்கு அனு­ம­திக்­கும் வகை­யில், சண்டை நீடிக்­கும் பகு­தி­களில் போர்­ நி­றுத்­தத்­தைக் கொண்டு வரும் 2565 தீர்­மா­னத்தை கொண்டு வரு­மாறு பிரிட்­டன் ஐநா­வி­டம் வலி­யு­றுத்­தி­யது.

ராணு­வ ஆட்­சியை எதிர்த்து மருத்­து­வர்­கள் வேலை நிறுத்த போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தைத் தொடர்ந்து, அதி­க­ரிக்­கும் தொற்று நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்­கக்­கூ­டிய அள­விற்கு மருத்­து­வர்­கள் இல்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மியன்­மா­ரின் சுகா­தார துறை 40 விழுக்­காடு மட்­டுமே செயல்­

ப­டு­வ­தாக ஐநா மதிப்­பிட்­டுள்­ளது.

மருத்­துவ ஊழி­யர்­கள், மருத்­துவ வச­தி­க­ளுக்கு எதி­ராக ராணு­வப் படை­கள் குறைந்­த­பட்­சம் 260 தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தா­க­வும் குறைந்­தது 67 மருத்­துவ ஊழி­யர்­

க­ளைத் தடுத்து வைத்­தி­ருப்­ப­தா­க­வும் ஐநா கூறு­கிறது.

புதன்­கி­ழ­மை­யன்று அங்கு 5,000 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். ஆனால் உண்­மை­யான எண்­ணிக்கை மிக­வும் அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்­கை­யும் ராணு­வம் கூறு­வ­தை­விட பல மடங்கு அதி­க­மாக இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

மியன்­மா­ரில் இது­வரை சுமார் 1.75 மில்­லி­யன் மக்­க­ளுக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.