ஜெனீவா: கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்து இவ்வளவு நாட்களாக சிரமப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கிடைத்த பலன்கள் வீண்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா கிருமி வகை மிக எளிதில் பரவக்கூடியது என்றும் மிக மோசமான பாதிப்பை ஏற்
படுத்தக்கூடியது என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் அக்கறை தெரிவித்தாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
உலகின் பெரும்பாலான பகுதி களில் கடந்த நான்கு வாரங்
களாக கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்கு நர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசுஸ் கூறினார்.
ஆப்பிரிக்க நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அங்கு கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 80 விழுக்காடு அதிகரித்துள்ளன.
"பாடுபட்டதற்கு அர்த்தமில்லாமல் போகும் அபாயம் உள்ளது. பல நாடுகளில் மருத்துவக் கட்டமைப்புகள் செய்வதறியாது தவிக்கின்றன," என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு டெட்ரோஸ் தெரிவித்தார். டெல்டா கிருமி வகை 132 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுவே அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொவிட்-19 கிருமி வகை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.
"இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பெருமளவில் பாதுகாப்பைத் தருகின்றன. டெல்டா கிருமி வகையிடமிருந்தும் கணிசமான அளவுக்கு அது பாதுகாப்பைத் தருகிறது," என்று உலக சுகாதார நிறுவனத்தின்
நெருக்கடிநிலை நிபுணர் மைக் ரயன் தெரிவித்தார்.
"நாம் அனைவரும் ஒரே கிருமியை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால் அந்தக் கிருமி மனிதர்கள் மத்தியில் இன்னும் வேக
மாகப் பரவ தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது. அதுதான் வித்தியாசம்," என்றார் அவர்.
2019ஆம் ஆண்டில் சீனாவில் முதன்முதலாகத் தலைதூக்கிய கொரோனா கிருமியைவிட டெல்டா கிருமி வகையின் பரவும் தன்மை 50 விழுக்காடு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மரியா வேன் கேர்கோவே தெரிவித்தார்.
டெல்டா கிருமி வகையால் மேலும் அதிகமானோர் மருத்துவ
மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

