மலேசியாவில் முன் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு

மலேசியாவில் முன் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு

2 mins read
58a42e27-6e4c-4aeb-8dfd-68a1788b7197
முன்பதிவு செய்யாமல் நேரடியாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அணுகுமுறை நாளை தொடங்குகிறது.படம்: பெர்னாமா -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் மேலும் 17,786 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதுவே அங்கு பதி­வா­கி­

உள்ள ஆக அதி­க­மான

அன்­றா­டப் பதிவு.

இதன்­மூ­லம் மலே­சி­யா­வில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 1,113,272ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கொவிட்-19 பாதிப்பு மோச­ம் அடைந்­துள்­ள­தால் தடுப்­பூசி போடும் திட்­டத்தை விரை­வுப்­

ப­டுத்த மலே­சிய அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

முன்­ப­திவு செய்­யத் தேவை­ இல்­லா­மல் நேர­டி­யாகத் தடுப்­பூசி போடும் நிலை­யத்­துக்­குச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் அணு­கு­முறை இன்று தொடங்க இருந்­தது.

ஆனால் இத்திட்டம் நாளை தொடங்­கும் என்று மலே­சி­யா­வின் தேசிய கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்தை ஒருங்­கி­ணைக்­கும் அமைச்­ச­ரான கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் முன்­ப­திவு செய்­யா­மல் நேர­டி­யாக தடுப்­பூசி நிலை­யத்­துக்­குச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் திட்­டம் நாளை தொடங்­கு­கிறது.

40 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­கும் வேறு நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கும் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 5ஆம் தேதி­யி­லி­ருந்து 18 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்­கும் இந்­தச் சேவை வழங்­கப்­படும் என்று திரு கைரி தெரி­வித்­தார்.

"குறிப்­பிட்ட சில தடுப்­பூசி மையங்­களில் மட்­டும் முன்­ப­திவு செய்­யா­மல் அங்கு நேர­டி­யா­கச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம். பொய்ச் செய்தி பர­வு­வ­தைத் தடுக்க இந்­தத் தக­வலை நான் தெரி­விக்­கி­றேன்," என்­றார் அமைச்­சர் கைரி. இந்­தச் சேவையை வழங்­கும் தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்­கான பட்­டி­யல் வெளி­யி­டப்­படும் என்­றார் அவர். புதிய திட்­டத்­தின்­கீழ் முத­லில் வரு­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்டு தடுப்­பூசி போடப்­படும் என்­றார் அவர்.

இன்­றைக்­குள் கிள்­ளான் பள்­ள­தாக்­கில் வசிப்­போ­ரில் 99 விழுக்­காட்­டி­ன­ருக்குத் தடிப்­பூசி

போட்­டுக்கொள்­வ­தற்­கான தேதி­யும் நேர­மும் உறுதி செய்­யப்­ப­டும்­ என்று திரு கைரி நம்­பிக்கை தெரி­

வித்­தார்.