பிரிஸ்பனில் முடக்கநிலை

பிரிஸ்பனில் முடக்கநிலை

1 mins read
362e0f65-70f0-4a25-868b-1d02fde150bc
-

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது ஆகப் பெரிய நகரமான பிரிஸ்பனில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிலிருந்து அங்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குவீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் டெல்டா கிருமி வகை பரவி வருவதால் இந்தக் கடுமையான கட்டுப்பாடு நடப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரஸ்பனிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வசிக்கும் மில்லியன் கணக்கானோருக்கு இல்லத் தனிமை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக குவீன்ஸ்லேண்ட் மாநிலத்தின் முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவித்தார்.