மலேசியாவின் பிரதமருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

1 mins read
ada417da-7f9a-4b5e-bf38-4b4de5a39a5c
-

மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகும்படி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கோலாலம்பூர் நகரின் மத்திய பகுதியில் திரண்டு கோரினர்.

மக்கள் ஒருமைப்பாட்டு அணி என தங்களையே அழைக்கும் அந்த ஆர்ப்பட்டக்காரர்கள் நேற்று நடத்திய அந்தப் போராட்டத்தை அடுத்து மெர்டேக்கா சதுக்கத்தைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சடலங்களைப் போன்ற பொம்மைகளைக் கொண்டு வந்து சிலர், கொவிட்-19 கிருமிப்பரவலை அரசாங்கம் கையாண்ட விதத்தை குறைகூறுகின்றனர். முழு நாடாளுமன்ற அமர்வுக்கும் இந்தக் கூட்டணி கோரி வருகிறது.

மலேசியாவின் அன்றாட கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் நேற்று 17, 786 ஆக அதிகரித்துள்ளது. இது, ஜூலை 1ஆம் தேதி பதிவான 6, 988ன் எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

ஆர்ப்பாட்டங்கள் நடந்த இடத்தில் போலிசார் சுற்றிக் காவல் நின்றனர்.