பாட்டுப் பாடியதற்காக பாடகர் மீது ஊழல் குற்றச்சாட்டு

பாட்டுப் பாடியதற்காக பாடகர் மீது ஊழல் குற்றச்சாட்டு

1 mins read
9eab719f-7b88-4d53-94aa-74bfec965f7e
பாடகர் ஆண்டனி வோங்(இடம்), ஆவ் நோக் ஹின். படங்கள்: ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் -

ஹாங்­காங்: ஹாங்காங்கில் எதிர்க்­கட்­சி­கள் நடத்­திய பேர­ணி­யில் இரண்டு முறை பாட்­டுப் பாடி­ய­தற்­காக பிர­பல பாட­க­ரான ஆண்­டனி வோங் மீது ஊழல் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

திரு வோங் மற்றும் எதிர்க்­கட்­சி­யின் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான ஆவ் நோக் ஹின் ஆகியோர் மீது ஊழ­லுக்கு எதி­ரான ஊழல் கண்­கா­ணிப்­புக் குழு ஊழல் குற்­றச்­சாட்டை கொண்டு வந்துள்ளது. திரு ஆவ் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­போது பொழுது­ போக்­கு­களை நடத்தி மக்­களை தமக்கு வாக்­குப்போட தூண்­டி­ய­தாக குற்றச்சாட்டு கூறுகிறது.

அப்­போது அந்தப் பேர­ணி­யில் 59 வயது பாட­க­ரும் பாட­லா­சி­ரி­ய­ரு­மான ஆண்­டனி இரண்டு பாடல்­க­ளைப் பாடி­ய­தா­கக் கூறப்­ ப­டு­கிறது. 2018 மார்ச் 3ஆம் தேதி எடின்­பர்க் பிளே­சில் அந்­தப் பேரணி நடை­பெற்­றது.

இடைத்­தேர்­த­லில் ஆவ் வெற்றி பெறு­வ­தற்கு முன்பு பேரணி நடத்­தப்­பட்­டது. திரு ஆவ் ஏற்கெனவே சிறை­யில் தள்ளப்பட்டுள்ளார்.