வூஹான், பெய்ஜிங்கில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர சோதனை நடவடிக்கை

பெய்­ஜிங்: உல­கையே நிலை­கு­லை­யச் செய்து இன்­ன­மும் அச்­சு­றுத்­த­லாக இருந்­து­வ­ரும் கொரோனா கிரு­மித்­தொற்று முதன்­மு­த­லில் கண்­ட­றி­யப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் சீனா­வின் வூஹான் நக­ரில் கொரோனா தொற்று மீண்­டும் தலை­காட்­டத் தொடங்­கி­யுள்­ளது.

நேற்று முன்­தி­னம் அங்கு ஏழு சமூ­கத் தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன. பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்று கூறப்­படு­கிறது.

இதை­ய­டுத்து நக­ரில் உள்ள ஒட்டு மொத்த மக்­க­ளுக்­கும் கொரோனா தொற்­றுச் சோதனை மேற்­கொள்­ளப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். அங்கு வாழும் 11 மில்­லி­யன் பேருக்கு கொரோனா சோதனை மேற்­கொள்­ளும் நட­வ­டிக்கை முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தாக அந்த அதி­கா­ரி­கள் கூறி­னர்.

2020ஆம் ஆண்டு தொடக்­கத்­தில் கொரோ­னா­வைக் கட்­டுப்­படுத்த அங்கு முழு­மை­யான முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து அங்கு சமூ­கத்­தொற்­று­கள் முற்றிலுமாக ஒழிக்­கப்­பட்­டது. பின்­னர் ஓராண்டு கழித்து இப்­போது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே சமூ­கத் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. சீனா­வில் அண்­மைய காலங்­களில் பெரிய அள­வில் தொற்று பரவி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அத­னை­ய­டுத்து அங்கு தொற்­றைக் கண்­ட­றிய தீவிர சோதனை மேற்­கொள்­ளும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

கடை­சி­யாக வந்த தக­வ­லின்­படி சீனா­வின் 18 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 27 நக­ரங்­களில் 400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜியாங்சு மாநிலத்தைச் சேர்ந்தோர் மட்டும் 284 பேர்.

அதி­வே­க­மா­கப் பர­வக்­கூ­டிய டெல்டா வகை கொரோனா தொற்றே இதற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் அங்கு 83 சமூ­கத் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக சீனா­வின் தேசிய சுகா­தார வாரி­யம் நேற்று தெரி­வித்­தது.

ஜூலை 10ஆம் தேதி ரஷ்­யா­வில் இருந்து நன்­ஜிங் நக­ரின் முக்­கிய விமா­னத் தளத்­தில் வந்­தி­றங்­கிய விமா­னத்­தில் இருந்து இந்­தத் தொற்று பர­வி­யி­ருக்­க­லாம் என்று அதி­கா­ரி­கள் நம்­பு­வ­தா­கக் கூறப்­படு­கிறது. சீனா­வின் பெய்­ஜிங் உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­களில் மில்­லி­யன் கணக்­கா­னோர் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். யாங்சௌ நக­ரின் கிழக்­கில் அமைந்­துள்ள நான்ஜிங் நக­ரில் 40 புதிய தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து, பாது­காப்­பாக வீட்­டிற்­குள் இருக்­கு­மாறு அந்­ந­க­ரத்­தின் மக்­க­ளுக்கு அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். இந்­நி­லை­யில் யாங்சோ நக­ரில் வசிக்­கும் 1.3 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர், வீடு­களில் முடங்­கிக்­கி­டக்­கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஒரு குடும்­பத்­தில் ஒரு­வர் மட்­டுமே வெளி­யில் சென்று அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்கி வர அனு­ம­திக்­கப்­படு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

இந்­நி­லை­யில், சீனா­வின் தலை­ந­க­ரான பெய்­ஜிங், தொற்று பாதிக்­கப்­பட்ட நக­ரங்­களில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்­குத் தடை விதித்­துள்­ளது. அத்­து­டன் உள்­ளூர் மக்­கள் கோடை­க்கால விடு­மு­றை­யைக் கழிக்க வெளி­யூர் செல்­லும் திட்­டத்தை ஒத்­தி­வைக்­கு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர். சீனா­வில் கடந்த ஜூலை மாத நடுப்­ப­கு­தி­யில் மட்­டும் 400க்கு மேற்­பட்ட தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக ஏஎ­ஃப்பி தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!