செய்திக்கொத்து

1 mins read
7c7dc154-349b-4df2-a6b6-195619869cc4
-

மியன்மாருக்கு ஆசியான் தூதர்

ஜகார்த்தா: ஆசியான் எனும் சிங்கப்பூரை உள்ளடக்கிய தென்-கிழக்கு ஆசிய நாடு களைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள், மியன்மார் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்துவதற்காக புருணையின் 2ஆம் வெளி யுறவு அமைச்சரான எரிவான் யூசோஃப்பை மியன்மாருக்கான தூதராக நியமித்துள்ளனர்.

மியன்மாரின் வன்முறைகளுக்கு முடிவு கட்டுமாறு திரு எரிவான் பணிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள ராணுவமும் அதன் எதிர்த்தரப்பினரும் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபடுவார். அந்நாட்டில் மனிதாபிமான உதவி களையும் அவர் மேற்பார்வையிடுவார் என்று ஆசியான் தெரிவித்தது.

சீனாவில் தொற்று திடீர்

அதிகரிப்பு; பயணத் தடை

பெய்ஜிங்: சீனாவில் தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இதையடுத்து நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் போக்குவரத்து இடைக்கால நிறுத்தம், வீட்டில் தங்கும் உத்தரவு உள்ளிட்ட வரம்புகள் பல இடங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சீனா, கொவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போதைய உருமாறிய டெல்டா கிருமியால் அது தடுமாறி வருகிறது. நேற்று மட்டும் 71 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஜூலை மாதத்திலிருந்து தலைநகர் பெய்ஜிங், வூஹான் உட்பட குறைந்தது 12 நகரங்களில் தொற்று பரவி வருகிறது.