முன்பதிவு தேவையின்றி தடுப்பூசி போடும் திட்டம் விரிவாக்கம்

2 mins read
282a741c-2d04-452f-a206-6fbbf6ec96ca
-

கோலா­லம்­பூர்: முன்­ப­திவு செய்­யா­மல் கொவிட்-19 தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் முறையை மலே­சிய அர­சாங்­கம் கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் முத­லில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

தற்­போது மலே­சி­யா­வெங்­கும் உள்ள தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு இந்­தத் திட்­டம் கூடிய விரை­வில் விரி­வு­ப­டுத்­தப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மூத்­தோர், உடற்­கு­றை­யுள்­ளோர், ஏற்­கெ­னவே மற்ற நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்ள 18 வயது அதற்­கும் மேற்­பட்­டோர், இரண்­டா­வது கொவிட்-19 தடுப்

­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள தவ­றி­ய­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், முன்­

க­ளப் பணி­யா­ளர்­கள், கல்வி நிலை­யங்­களில் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரின் நலன் கருதி இந்­தத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படுவதாக தெரி­விக்­கப்­பட்­டது. நாட்­டின் தடுப்­பூ­சித் திட்­டத்தை மேம்­ப­டுத்த இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மலே­சி­யா­வின் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டப் பணிக் குழு நேற்று கூறி­யது.

பேராக், கெடா, சாபா, மலாக்கா, சர­வாக் ஆகிய மாநி­லங்­களில் உள்ள தடுப்­பூசி நிலை­யங்­கள் மூத்­தோ­ருக்­காக இந்­தத் திட்­டத்தை தொடங்­கி­விட்­ட­தாக பணிக்­குழு நேற்று வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது. இந்­நி­லை­யில், மலே­சி­யா­வில் மேலும் 19,257 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இதன் மூலம் மலே­சியா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 1,243,852ஆக அதி­க­ரித்­துள்­ளது. ஆக அதி­க­மாக சிலாங்­கூர்

மாநி­லத்­தில் புதி­தாக 7,084 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு மோச­ம­டைந்து வரு­வ­தால் அதற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­கள் எந்த

அள­வுக்­குப் பலன் தரு­கின்­றன என்­பது குறித்து தமது அர­சாங்­கம் மறு­ஆய்வு செய்து உத்­தி­களை மேம்­ப­டுத்­தும் என்று மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரி­வித்­துள்­ளார். பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது குறித்து அவர் அக்­கறை தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கத் தேவை­யான சாத­னங்­களை ஜோகூர் மாநி­லத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­கள் தொடர்ந்து வைத்­தி­ருப்­பதை உறுதி செய்ய தனி­யார் துறை நன்­கொடை வழங்­கு­வது முக்­கி­யம் என்று அம்­மா­நில மன்­னர் சுல்­தான் இப்­ரா­ஹிம் சுல்­தான் இஸ்­கந்­தர் நேற்று அழைப்பு விடுத்­தார்.

"கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும். அர­சாங்­கம் மட்­டுமே அனைத்து பாரங்­க­ளை­யும் சுமக்க வேண்­டும் என நினைப்­பது தவறு. தனி­யார் துறை­யும் நிதி உதவி வழங்­கும் என நம்­பு­கி­றேன். அப்­போ­து­தான் மருத்­து­வச் சாத­னங்­கள் மருத்­து­வ­

ம­னை­க­ளைச் சென்­ற­டை­யும்," என்­றார் ஜோகூர் மன்­னர். ஜோகூர் அர­ச குடும்­பத்­தின் பேரின்­கீழ் செயல்­படும் அமைப்புகளுக்கு வழங்­கப்­படும் நன்­கொடை, மருத்­து­வச் சாத­னங்­கள் வாங்­கு­வ­தற்­கும் வசதி குறைந்­தோ­ருக்கு உணவு வழங்­க­வும் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர். ஜோகூர் மாநில மருத்­து­வ­

ம­னை­க­ளுக்­குத் தேவை­யான மருத்­து­வச் சாத­னங்­களை வாங்க ஜோகூர் மன்­னர் 5 மில்­லியன் ரிங்­கிட் நன்­கொடை வழங்குகிறார்.