சிட்னி: தடுப்பூசி போட்டவர்களுக்கு வேலை

சிட்னி: தடுப்பூசி போட்டவர்களுக்கு வேலை

1 mins read
66677a3b-ecda-4178-8660-d5126613722d
-

கான்­பரா: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்­னி­யில் கிரு­மித்­தொற்­றால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் கட்­டு­மானப் பணி­க­ளைத் தொடங்க நியூ சவுத் வேல்ஸ் அனு­மதி அளித்­துள்­ளது.

ஆனால், வேலைக்­குச் செல்­ப­வர்­கள் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.

நேற்று முன்­தி­னம் அங்கு 344 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மேலும் சில பகுதி

களுக்கு முடக்­க­நிலை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், தொற்று எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கூறி­னார் நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர்.

இருப்­பி­னும் முக்­கிய வேலை துறை­களை மீண்­டும் தொடங்­கும் நோக்­கில் கட்­டு­மான வேலை­களை மீண்­டும் தொடங்க அர­சாங்­கம் முடிவு செய்­துள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இது­வரை 25 விழுக்­காட்­டிற்­கும் குறை­வா­ன­வர்­களே முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, மெல்­பர்­னில் இரண்­டா­வது வார­மாக முடக்­க­நிலை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு மேலும் 20 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

இவர்­கள் எப்­படி தொற்­றுக்கு ஆளா­னார்­கள் என்­பது தெரி­யாத நிலை­யில், ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப் படு­வ­தாக விக்­டோ­ரியா முதல்­வர் டான் ஆண்ட்­ரூஸ் அறிவித்து

உள்ளார்.