மணிலா: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் செல்லும் கொவிட்-19 நோயாளிகள் அதற்காக இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது பிலிப்பீன்சில்.
ஜூலை மாத நடுப் பகுதி முதல், அவசர சிகிச்சை பிரிவை நாடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதாக அவசர மருத்துவத்திற்கான பிலிப்பீன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவரான பவுலின் கன்வோகர்.
சென்ற வாரம் வரை, அவசர சிகிக்சை பிரிவில் இருந்து மருத்துவப் படுக்கைக்கு மாற்றப்படு
வதற்கு 24 மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது.
தொற்றுக்கு ஆளானவர்களின் மற்ற குடும்பத்தினர் சில நாட்களுக்குப் பிறகு உடல்நலமில்லாமல் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்றும் குறிப்பாக மூத்தோர் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வருவதாகவும் அவர் சொன்னார்.
மேலும் இளம் வயதினர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, கொவிட்-19 சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக மருத்துவப் படுக்கைகளும் பெரும்பாலான மருத்துவமனைகளில் நிரம்பி வருவதாகக் கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் 68 விழுக்காட்டு படுக்கைகளும் சாதாரண சிகிச்சை பிரிவில் 58 விழுக்காடும் நிரம்பிவிட்டதாக சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது.
மேலும் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் தற்போது 21.9 விழுக்காடாக உள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் தொற்றுக்கு ஆளாகினர்.
இதற்கு முன்பு சென்ற மார்ச் -ஏப்ரல் மாதத்தில் தொற்று உச்சத்தில் இருந்தபோது இந்த விகிதம் 25 விழுக்காடாக இருந் தது.
பிலிப்பீன்சில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் அதிகரிப்பு

