4வது வாரமாக முடங்கிய சீனா

4வது வாரமாக முடங்கிய சீனா

1 mins read
fbb03d59-8d76-4b3d-a911-d72753eb09aa
-
Google News Preferred Icon

பெய்ஜிங்: கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சீனா வில் தொடர்ந்து 4வது வார மாக முடக்கநிலை நீடிக்கிறது.

மீண்டும் பொருளியல்

முடங்கிவிடக்கூடாது என்ப

தற்காக நாடு தழுவிய முடக்க நிலையை அறிவிக்காமல், குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே முடக்கியிருந்தாலும் பொருளியல் பாதிப்பிலிருந்து சீனாவால் தப்ப முடியவில்லை.

டெல்டா வகை கிருமித் தொற்று கண்டறியப்பட்டதை யடுத்து, கொண்டு வரப்பட்ட கடுமையான முடக்கநிலையால், குறிப்பாக போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் பொருளியல் தாக்கத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்கு தாமதமாகும் என்றும் அதற்கு நான்காவது காலாண்டு வரை ஆகும் என்றும் சீனா கூறியுள்ளது.

சென்ற வாரம் மட்டும் 583 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது முந்தைய வாரத்தைவிட 85 விழுக்காடு அதிகமாகும்.