செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1fd8138e-b279-4fbe-89cc-68a73ffced4c
-

மூக்கு வழி செலுத்தும் மருந்து; மனிதர்களிடம் பரிசோதனை

பேங்காக்: கொவிட்-19 தடுப்பு மருந்தை மூக்கு வழி செலுத்தும் ஸ்பிரேவாக தாய்லாந்து கண்டுபிடித்துள்ளது. இதற்கான எலிகள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, இவ்வாண்டு இறுதியில் மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தாய்லாந்து அரசாங்க அதிகாரி ஒருவர் சொன்னார். இந்த தடுப்பு மருந்துகளை மரபணு பொறியியல், உயிரி தொழில்நுட்பத்திற் கான தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

ஜப்பானில் 100 மில்லியன் தடுப்பூசி

தோக்கியோ: ஜப்பானில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் மூத்தோருக்கு முழுமையாக தடுப்பூசி போடும் விகிதத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளது ஜப்பான். 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக ஜப்பானில் அன்றாட தொற்று ஆக அதிகளவில் பதிவாகி வந்தது. தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட இளம் வயதினர் ஆவர்.

பயனற்ற பொருட்களால் உருவான 'டெல்டா ரோபோ'

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தெம்போக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வீட்டில் உள்ள பயன்படாத பொருட் களை வைத்து மனித இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பானை, கடாய், பழைய தொலைக்காட்சியின் திரை ஆகியவற்றால் உருவாக்கப் பட்டுள்ள இந்த மனித இயந் திரத்திற்கு 'டெல்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் தலை சோறு சமைக்கும் குக்கரில் செய்யப்பட்டுள்ளது. கிருமித் தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, மருந்தளிக்க இது பயன்படுகிறது.

தாய்லாந்தில் ஆர்ப்பாட்டம்

பேங்காக்: தாய்லாந்தில் கொவிட்-19 சூழலை அரசாங்கம் கையாண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்றவர்கள் மீது போலிசார் இரண்டாவது நாளாக ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தினர். அவர்கள் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதை மீறி பேரணி சென்றனர்.