சிட்னி: ஆஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவில் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நகரில் இதுவரை கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் அதிகம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.
ஆனால் இப்போது அங்கேயும் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அந்த நபரிடமிருந்து பிறருக்குத் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தபோது அவர் சமூகத்தில் நடமாடிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று மதியம் மூன்று மணி முதல் கேன்பராவின் சுமார் 400,000 மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவசரப்பட்டு தேவைக்கு அதிகமாக அத்தியாவசிப் பொருட்களை வாங்கத் தேவையில்லை என்று நகரவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

