தடுப்பூசி போட்டுக்கொண்டால் நியூசிலாந்து செல்லலாம்

தடுப்பூசி போட்டுக்கொண்டால் நியூசிலாந்து செல்லலாம்

1 mins read
dedf5632-f112-4bca-b613-9ba36f0e02ce
-

வெல்­லிங்­டன்: கிரு­மிப் பர­வல் அபா­யம் குறை­வாக இருக்­கும் நாடு­களிலி­ருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள பய­ணி­களை அடுத்த ஆண்டு முதல் கட்­டுப்­பா­டு­க­ளின்றி வர­வேற்க நியூ­சி­லாந்து ஆயத்­த­மா­கி­வ­ரு­கிறது. அத்­த­கைய பய­ணி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­த­வேண்­டிய அவ­சி­ய­மும் இருக்­காது என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டன் தெரி­வித்­துள்­ளார்.

தற்போது பயணிகளுக்குத் திறந்துவிட நியூசிலாந்து தயாராய் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பய­ணி­க­ளைக் கட்­டங்­கட்­ட­மாக வர­வேற்க நியூ­சி­லாந்து திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார். கொவிட்-19 கிருமி உல­க­ள­வில் பர­வத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து நியூ­சி­லாந்து கிட்­டத்­தட்ட முற்­றி­லு­மாகவே பய­ணி­களை நாட்­டிற்­குள் அனு­ம­திக்­கா­மல் இருந்­துள்­ளது.