கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த மாதம் ஏழாம் தேதியன்று நடைபெறவுள்ளது. அதற்கு முதல் நாள், நான்காவது முறையாக நாடாளுமன்றம் கூட்டப்படும்.
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா மெய்நிகர் வாயிலாக இந்தத் தகவலை நேற்று வெளியிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை விரைவில் நடத்துமாறு மலேசிய மாமன்னர் நேற்று முன்தினம் பிரதமர் முகைதீன் யாசினுக்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, கூட்டணி ஆட்சி எந்தத் திசையை நோக்கிப் போகிறது என்பதைப் பற்றி கலந்துபேச சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி, தேசிய முன்னணிக் கூட்டணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்ற ஆண்டு முகைதீன் யாசின் பிரதமரானதிலிருந்து மலேசியாவில் அரசியல் சூழல் நிலைத்தன்மையின்றி காணப்பட்டு வருகிறது.

