தோக்கியோ: வடக்கு ஜப்பானில் உள்ள ஒரு துறைமுகத்தில் தரைதட்டிய கப்பல் ஒன்று இரண்டு பாகங்களாக உடைந்துள்ளது.
அதில் எண்ணெய் கசிவும் ஏற்பட்டது.
கப்பலில் இருந்த 21 பேரில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் எண்ணெய்க் கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
39,910 டன் எடையைக் கொண்ட 'க்ரிம்சன் பொலாரிஸ்' என்ற இந்தக் கப்பல் மரக்கட்டை துண்டுகளை ஏந்தி வந்தது.
ஹாக்கினொஹெ துறைமுகத்தில் கப்பல் நேற்று முன்தினம் தரைதட்டியது.
அதை நன்கு சமாளித்தாலும் மோசமான பருவநிலை காரணமாகக் கப்பலால் அதிக தூரம் செல்லமுடியவில்லை.

