மலேசியா: கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சம்

மலேசியா: கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சம்

2 mins read
06af4b3b-1598-4c47-ad80-9b6939f4faf6
-

புத்ராஜயா: மலேசியாவில் புதிதாக 21,668 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடங்­கிய பிறகு அந்­நாட்­டில் ஒரு நாளில் இத்­தனை பேருக்குத் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது இதுவே முதல் முறை. மலே­சி­யா­வில் மொத்­த­மா­கக் குறைந்­தது 1,342,215 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்பட்டுள்­ளது.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் பதின்ம வய­தி­ன­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடச் சொல்லி பலர் குரல் எழுப்­பி­வ­ரு­கின்­ற­னர். அந்­நாட்­டில் கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து புதிய உச்­சத்­தைத் தொடும் வேளை­யில் அடுத்த மாதம் பள்­ளி­கள் திறக்­கப்­ப­ட­வுள்­ள­தால் இந்த நிலை உரு­வா­கி­யுள்­ளது. பள்ளி மாணவர்­க­ளின் பெற்­றோர் உள்­ளிட்ட பலர் இது குறித்து கவலை தெரி­வித்­துள்­ள­னர். பதின்ம வய­தி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடக் கோரி இணை­யத்­தில் உரு­வாக்­கப்­பட்ட மனு­வில் குறைந்­தது 592 பேர் கையெழுத்திட்­ட­னர்.

12லிருந்து 17 வய­துக்கு உட்பட்ட சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தன் தொடர்­பில் மலே­சிய அர­சாங்­கம் தொடர்ந்து மாறு­பட்ட நிலைப்­பாட்டை எடுத்­துவந்­துள்ளது. இவ்­வாண்டு முக்­கி­யத் தேர்­வு­களை எழு­த­வி­ருக்­கும் மாண­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று மலே­சி­யா­வின் தடுப்­பூசித் திட்­டத்­துக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் கடந்த ஜூன் மாதம் கூறி­யி­ருந்­தார்.

சென்ற மாதம் முதல் மாணவர்­க­ளுக்கு ஃபைசர் தடுப்­பூசி போடப்­படும் என்­றும் பள்­ளி­கள் தடுப்­பூசி போடு­வ­தற்­கான நிலை­யங்­க­ளாக இயங்­கும் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.

ஆனால் இதன் தொடர்­பில் கூடு­தல் தக­வல்­கள் தேவை எனச் சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கூடு­தல் ஆய்வு­க­ளின் முடிவு­கள் தெரியும் வரை மலே­சிய அர­சாங்­கம் பதின்ம வய­தி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடாது எனத் திரு கைரி சென்ற மாதம் சொன்னார்.