சிட்னி: தோக்கியோவிலிருந்து சிட்னி வழியாகத் தெற்கு ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பும் ஒலிம்பிக் வீரர்களை 28 நாட்களுக்குத் தனிமைப்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தப்போவதில்லை என்று அம்மாநிலத்தின் அரசாங்கம் கூறியுள்ளது.
இது ஈவிரக்கமில்லாத ஒரு சட்டம் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழு சாடியுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவைப் பாதுகாக்க இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என அதன் முதலமைச்சர் ஸ்டீவன் மார்ஷல் சொன்னார்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது முடக்கநிலை நடப்பில் உள்ளது.

