'ஒலிம்பிக் வீரர்கள் விதிவிலக்கல்ல'

'ஒலிம்பிக் வீரர்கள் விதிவிலக்கல்ல'

1 mins read
e967ef1c-9637-442b-a1ef-e177dc2afa4d
-

சிட்னி: தோக்­கி­யோ­வி­லி­ருந்து சிட்னி வழி­யாகத் தெற்கு ஆஸ்திரேலி­யா­விற்­குத் திரும்­பும் ஒலிம்­பிக் வீரர்­களை 28 நாட்­களுக்­குத் தனி­மைப்­ப­டுத்­த­வேண்­டும் என்ற நிபந்­தனையைத் தளர்த்தப்போவதில்லை என்று அம்­மா­நி­லத்­தின் அர­சாங்­கம் கூறி­யுள்ளது.

இது ஈவிரக்கமில்லாத ஒரு சட்டம் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழு சாடியுள்ளது.

தெற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வைப் பாதுகாக்க இத்­த­கைய கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­பது அவசி­யம் என அதன் முத­ல­மைச்­சர் ஸ்டீ­வன் மார்ஷல் சொன்னார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது முடக்கநிலை நடப்பில் உள்ளது.