லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டி, இம்மாதம் அதன் இரண்டாவது கம்பி வண்டி தடத்தை வரவேற்றுள்ளது.
மெக்சிகோவிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட இஸ்தாபலபா மாநகராட்சியில் கடுமையான போக்குவரத்து நெரிசலைவிட்டு அப்பகுதி மக்கள் தப்பிக்க இந்த கம்பி வண்டி பயணம் வழிவகுக்கிறது.
முதலாவது கம்பி வண்டி தடம் முழுச் செயல்பாட்டிற்கு வந்து ஒரு மாதம் நிறைவடைவதற்குள் அதன் இரண்டாவது தடத்தை அந்நகர மேயர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
லத்தின் அமெரிக்காவிலேயே ஆக நீளமான கம்பி வண்டி தடம் என்று இது அழைக்கப்படுகிறது. ஏழு நிலையங்களைக் கொண்டுள்ள கம்பி வண்டி தடத்தின் நீளம் 10.8 கிலோ மீட்டர்.
இதன் மூலம் பயண நேரம் 50 நிமிடங்கள் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

