மலேசியாவில் புதிதாக 21,468 பேருக்கு கொவிட்-19 தொற்று

மலேசியாவில் புதிதாக 21,468 பேருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
20d8b247-700e-4de1-a6b7-fa54fd56ead4
படம்: இபிஏ -

மலேசியாவில் இன்று (ஆகஸ்ட் 13) புதிதாக 21,468 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,363,683ஆக உயர்ந்துள்ளது.

கிருமித்தொற்று காரணமாக மேலும் 277 பேர் உயிரிழந்துவிட்டனர். கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 11,968ஆக அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 17,025 பேர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,075 பேர் உள்ளனர். அவர்களில் 537 பேருக்கு உயிர்வாயு அளிக்கப்பட்டு வருகிறது.