டெல்டா பிளஸ் கிருமிக்கு மும்பையில் முதல் மரணம்

டெல்டா பிளஸ் கிருமிக்கு மும்பையில் முதல் மரணம்

1 mins read
ac4537b3-cd9c-4713-8eca-eb23b2aeb628
மும்பையில் உள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றில் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நேற்று (ஆகஸ்ட் 12) வரிசையில் நின்ற மக்கள். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலையில் நாட்டையே புரட்டிப் போட்ட டெல்டா வகை கொரோனா கிருமி அல்லாமல் புதிய உருமாறிய கொரோனா வகையான டெல்டா பிளஸ் கிருமிக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

மும்பையில் 63 வயது மாது ஜூலை 27ம் தேதி டெல்டா பிளஸ் கிருமிக்கு பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மாது இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர். மற்ற நாடுகளுக்கு அவர் பயணமும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. கொரோனா கிருமி தாக்கும் முன்பே இவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இவருக்கு ஜூலை 21ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

குறிப்புச் சொற்கள்