வழக்கமான சோதனையில் தெரியவந்த வெளி­நாட்டு ஊழியர் தங்குவிடுதி தொற்றுக் குழுமம்

வழக்கமான சோதனையில் தெரியவந்த வெளி­நாட்டு ஊழியர் தங்குவிடுதி தொற்றுக் குழுமம்

2 mins read
8ec1e180-1273-4e35-8e7a-3f6780c9da24
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தற்­போது தொற்று நில­வி­வ­ரும் வெஸ்ட்­லைட் ஜுனி­பர் வெளி­நாட்டு ஊழியர் தங்­கு­வி­டு­தித் தொற்­றுக் குழு­மத்­தின் முதல் தொற்று, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடந்த வழக்­க­மான அட்­ட­வ­ணை முறைப் பரி­சோ­த­னை­களில் தெரிய வந்­த­தாக மனித வள அமைச்சு கூறி­யுள்­ளது.

அத்­தொற்­றுக் குழு­மத்­தில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 48 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தன.

மண்­டா­யில் இருக்­கும் அந்­தத் தங்­கும் விடு­தி­யில் தொற்­றுக் குழு­மம் உரு­வா­ன­தாக சுகா­தார அமைச்சு கடந்த ஜூலை 27ஆம் தேதி அறி­வித்­தது. அப்­போது ஒன்­பது பேருக்கு தொற்று ஏற்­பட்­டி­ருந்­தது.

தொற்­றுக் குழு­மத்­தில் இருந்த ஆறு பேர் அங்கு தொற்று ஏற்­பட்ட முதல் நப­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் என்று மனி­த­வள அமைச்சு நேற்­று­முன்­தி­னம் ஸ்ட்­ரெட்ய்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தது.

மற்ற தொற்­றுச் சம்­ப­வங்­கள் முன்­னெச்­செ­ரிக்­கை­யாக மேற்­கொள்­ளப்­பட்ட கிரு­மிப் பரி­சோ­த­னை­கள் அல்­லது அட்­ட­வ­னை­ப­டி­செய்த சோதனை­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­து என்று மனி­த­வள அமைச்சு தெரிவித்தது.

அவர்­க­ளுக்கு தொற்று அறி­கு­றி­கள் ஏதும் இல்லை அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் இருந்­தன என்­றும் அவர்­கள் சிகிச்­சைக்­காக வேறு இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர் என்­று அமைச்சு கூறியது.

முன்­னெச்­செ­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளாக, தொற்­றுள்­ள­வர்­க­ளு­டன் அணுக்­க­மான தொடர்­பில் இருந்­த­வர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப் பட்­டு­விட்­ட­னர். மேலும், வெஸ்ட்­­லைட் ஜுனி­பர் தங்­கு­வி­டு­தி­யில் உள்ள எல்லா வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் கிரு­மிப் பரி­சோ­த­னை­களும் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

மேலும், வாரத்­துக்கு ஒரு நாள் பெயர் பட்­டி­ய­லின்­படி அவர்­க­ளுக்கு கிரு­மிப் பரி­சோ­தனை மேற்­ற­கொள்­ளப்­படும் என்­றும் அது கூறி­யது.

தங்­கு­வி­டு­தியை நடத்­தும் வெஸ்ட்­லைட் அகா­ம­டே­ஷன் நிறு­வ­னம், ஜூலை­யில் விடு­தி­யில் 1,408 பேர் இருந்­த­னர் என்று கூறி­யது. விடு­தி­யில் அதி­க­பட்­ச­மாக 1,900 பேர் வரை தங்­க­லாம்.

தொற்­றுக் குழு­மம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட பின்­னர், சுமார் 500 ஊழி­யர்­கள் அர­சாங்­கத்­தின் தனி­மைப்­ப­டுத்­து­தல் வளா­கங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

அவர்­களில் 380 பேர் விடுதி திரும்­பி­யுள்­ள­தா­க­வும் விடு­தி­யில் உள்ள அனை­வ­ரும் வேலைக்கு திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் நிறு­வ­னம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்