அரச மலேசிய ஆகாயப் படை முகாமில் துப்பாக்கிச் சூடு; நால்வர் மரணம்

அரச மலேசிய ஆகாயப் படை முகாமில் துப்பாக்கிச் சூடு; நால்வர் மரணம்

1 mins read
0435a24a-4ff6-493d-abf4-5454a986aaff
-

குச்­சிங்: மலே­சி­யா­வின் சர­வாக் மாநி­லத்­தில் உள்ள அரச மலே­சிய ஆகா­யப் படை முகா­மில் நேற்று காலை நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டில் நான்கு அதி­கா­ரி­கள் மாண்­ட­னர். முகா­மின் பாது­கா­வ­லர் அறை­யில் தாக்­கு­தல் நடந்­த­தாக சர­வாக் போலிஸ் ஆணை­யர் ஐடி

இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

அதிகாரிகள் இரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர். இன்­னோர் அதி­காரி குண்­ட­டிப்­பட்­டும் அரு­கில் இருந்த மருந்­த­கத்­துக்கு வாக­னம் ஓட்­டிச் சென்­றார்.

ஆனால் சிகிச்சை பல­னின்றி அவர் மாண்­ட­தாக சர­வாக் போலி­சார் தெரி­வித்­த­னர்.

சக அதி­கா­ரி­க­ளைத் துப்­பாக்­கி ­யால் சுட்­ட­வர் தமது உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

சம்­ப­வம் குறித்து போலி­சார் விசா­ரணை நடத்­து­வ­தாக அரச மலே­சிய ஆகா­யப் படை கூறி­யது. அதற்கு முன்பு சம்­ப­வம் குறித்த ஊகச் செய்­தி­க­ளைப் பரப்ப வேண்­டாம் என்று பொது­மக்­க­ளி­டம் அது கேட்­டுக்­கொண்­டது.

"இந்த வழக்கு குறித்து போலி­சார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். இந்த விவ­கா­ரத்தை அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­து­விட்­டோம். இருப்­பி­னும், தாக்­கு­தல் நிகழ்ந்­த­தற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய நாங்­கள் விசா­ர­ணைக் குழு ஒன்றை அமைப்­போம்," என்று அரச மலே­சிய

ஆகா­யப் படை நேற்று கூறியது.