பிலைமத்: இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டெவோன் மாநிலத்தின் துறைமுக நகரான பிலைமத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் மாண்டனர். அவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆடவர்களும் அடங்குவர். அவர்களைத் தவிர்்த்து, தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவரும் மாண்டுவிட்டதாக டெவோன், கோர்ன்வால் போலிசார் தெரிவித்தனர்.
தாக்குதலில் பத்து வயதுக்கும் குறைவான சிறுபிள்ளை ஒன்று உயிரிழந்ததாக பிரிட்டிஷ் நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பயங்கர
வாதத் தாக்குதல் அல்ல என்று போலிசார் கூறினர்.
மரணமடைந்தோர் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த பத்து ஆண்டுகளில் இதுவே பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம். தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. துப்பாக்கிக்காரர் வீடு வீடாகச் சென்று துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

