புத்ராஜெயா: மலேசியாவில் நேற்றைய நிலவரப்படி மேலும் 277 பேர் கொவிட்-19 காரணமாக மாண்டனர்.
இதன்மூலம் கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் மாண்டோர் எண்ணிக்கை 11,968ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 காரணமாக மருத்துவமனைகளில் இல்லாது வீடு போன்ற வேறு இடங்களில் மாண்டோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று 96ஆகப் பதிவானது.
அவர்களில் 65 மலேசியர்களும் 31 வெளிநாட்டவர்களும் அடங்குவர் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 93ஆக இருந்தது.

