கடுமையான கட்டுப்பாடுகளுக்குத் தயாராகும் சிட்னி

கடுமையான கட்டுப்பாடுகளுக்குத் தயாராகும் சிட்னி

1 mins read
0e042c71-fd8a-48ea-8b8f-029a54d80e00
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்­சின் தலை­ந­க­ரான

சிட்­னி­யில் டெல்டா கொவிட்-19 கிருமி வகை­யால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் மேலும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்

­ப­டுத்த அது தயா­ராகி வரு­கிறது.

சிட்னி நக­ரில் கடந்த ஏழு வாரங்­க­ளாக முடக்­க­நிலை நடப்­பில் இருந்து வரு­கிறது. இருப்­பி­னும், கொவிட்-19 அன்­றா­டப் பதிவு குறைந்­த­பா­டில்லை. மாறாக, அது அதி­க­ரித்து வரு­கிறது. இத­னால் முடக்­க­நிலை விதி­மு­றை­கள் கடு­மை­யாக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இல்­லத் தனிமை உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்த கூடு­த­லாக 500 ராணுவ வீரர்­க­ளின் உதவி தேவை என்று நியூ சவுத் வேல்ஸ் போலிஸ் படை கோரிக்கை விடுத்­துள்­ள­தாக ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தி ஹெரல்ட் நாளி­தழ் தெரி­வித்­தது.

சிட்­னி­யில் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் ஆயு­தம் ஏந்­தாத ராணுவ வீரர்­கள் சுற்­றுக்­

கா­வல் பணி­யில் ஈடு­ப­டு­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 16 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­களில் 25 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தாக கவலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மூன்று நாட்­க­ளாக நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் ஒவ்­வொரு நாளும் குறைந்­தது 300 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.