பெய்ஜிங்: கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரில் தலைதூக்கியது. இதுவரை கிருமித்தொற்று காரணமாக உலகெங்கும் மில்லியன்கணக்கானோர்
மாண்டுவிட்டனர். இந்நிலையில், கொவிட்-19 கிருமி எங்கிருந்து, எவ்வாறு உருவானது என்பதைக் கண்டறிய உலக சுகாதார நிறு
வனம் விசாரணை நடத்த விரும்பு கிறது. நடத்தப்படும்
விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சீனாவிடம் அது கேட்டுக்கொண்டது.
ஆனால் இது தனக்குத் தரப்படும் அரசியல் நெருக்குதல் என்று கூறி, விசாரணைக்கு
ஒத்துழைப்புத் தர சீனா மறுத்துவிட்டது.

