சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 84 வயது முதியவர் கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளால் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
அவருக்கு ஜூலை 28ஆம் தேதி அறிகுறிகள் தெரிந்ததை அடுத்து அடுத்த நாள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொற்று இருந்தது அங்கு உறுதியானது. அந்த முதியவர், புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவு ஆகிய நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தார்.
சிங்கப்பூரில் அந்த ஆடவரையும் சேர்த்து கொவிட்-19 தொற்று காரணமாக மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்ததாக சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

