சிட்னியில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அதிக அபராதம்

சிட்னியில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அதிக அபராதம்

1 mins read
5f7d7cdd-793a-41cd-989a-1038b7c0ce1a
-

சிட்னி: சிட்னியில் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக முடக்கநிலை இருப்பினும், கிருமிப் பரவல் கட்டுக்குள் வரவில்லை. எனவே, சிட்னி உள்ளிட்ட நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் விதிமுறைகள் அல்லது கட்டுப்பாடுகளை மீறுவோருக்கான அபராதத் தொகையை ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகரித்துள்ளது.

வீட்டில் தங்கும் உத்தரவை மீறுவோர் அல்லது தொடர்புத் தடமறிதல் அதிகாரிகளிடம் பொய் சொல்வது போன்ற

வற்றுக்கான அபாரதத் தொகை 5,000 ஆஸ்திரேலிய டாலராக (S$4,988) உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் சொன்னார். முன்பு இது 1,000 ஆஸ்திரேலிய டாலராக இருந்தது.

அதுபோல் தகுந்த அனுமதி இல்லாமல் மாநிலத்திற்குள் நுழைபவர்களுக்கு 3,000 ஆஸ்திரேலிய டாலர் அபாரதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ செளத் வேல்ஸ் மாநிலத்

தில் நேற்று 466 கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவானது. இது அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும். நேற்று மேலும் நால்வர் மாண்டதைத் தொடர்ந்து, அங்கு இதுவரை மாண்டோர் மொத்த எண்ணிக்கை 42 ஆனது.

இந்தச் சூழலில் ஆகஸ்ட் 28ஆம் தேதியோடு முடக்கநிலை முடிவடைவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றும் கூறப்

படுகிறது. மேலும் முடக்கநிலை உத்தரவு மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிட்னியில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை மக்கள் சரியாக பின்பற்றுவதை உறுதி செய்வதில் போலிசாருக்கு உதவும் வகையில் அடுத்த வாரம் முதல் கூடுதல் ராணுவப் படையினர் பணியமர்த்தப்படவுள்ளனர்.