தொற்று அதிகரிப்பு; கார் நிறுத்தத்தில் படுக்கைகள்

தொற்று அதிகரிப்பு; கார் நிறுத்தத்தில் படுக்கைகள்

1 mins read
c2a5900b-9348-4384-bfc6-5c4ef0e61edb
மிசிசிப்பி பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் கார் நிறுத்தத்தில் அமைக்கப்்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவப் படுக்கைகள்.படம்: மிசிசிப்பி பல்லைக்கழகம் மருத்துவ மையம் -

வாஷிங்டன்: அமெரிக்காவில் கிருமித்தொற்று கட்டுக்

கடங்காமல் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது மிசிசிப்பி மாநிலத்தின் நிலைமை.

முந்தைய கிருமிப் பரவலின் போது நியூயார்க் நகரில் நிலவிய மோசமான கிருமிப் பரவலை பிரதிபலிக்கிறது மிசிசிப்பி மாநிலம். அங்கு கொவிட்-19 நோயாளிகளால் மருத்துவ

மனைகள் நிரம்பி வழிகிறது. அங்கு மருத்துவ படுக்கைகள் மட்டுமல்ல, சுகாதார ஊழியர் பற்றாக்குறையும் நிலவுகிறது.

இந்நிலையில், நோயாளி

களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மிசிசிப்பி பல்கலைக்

கழக மருத்துவ மையத்தின் கார் நிறுத்தத்தில் 20 தற்காலிக படுக்கைகள் நேற்று முன்தினம் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்காவில் பிள்ளைகள் தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருவதாகவும் 1,871 பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இது முன்னெப்போதும் இல்லாத ஆக அதிக எண்ணிக்கையாகும்.