ரஷ்யாவில் நான்காவது நாளாக தொற்று அதிகரிப்பு

ரஷ்யாவில் நான்காவது நாளாக தொற்று அதிகரிப்பு

1 mins read
5c7dab86-6636-4451-9f25-f1e9c7e5a30e
-
Google News Preferred Icon

மாஸ்கோ: ரஷ்யாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் ஆக அதிகளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.

உலகளவில் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யாவில், டெல்டா வகை கிருமிப் பரவல் காரணமாக சென்ற ஜூன் மாத நடுப்பகுதி முதல் அதிகமா னோர் தொற்றுக்கு ஆளாகத் தொடங்கினர்.

அங்கு நேற்று 22,144 பேர் தொற்றுக்கு ஆளாகினர், 819 பேர் மாண்டனர். இதையடுத்து, மாண்டோர் எண்ணிக்கை 169,683 ஆனது. உடற்கூராய் விற்குப் பிறகு தொற்று காரண மாக மாண்டதாக உறுதிப் படுத்தப்பட்டவர்கள் மட்டுமே இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

கிருமித்தொற்று தொடர்பு உடைய மரணங்கள் என்று பார்த்தால், ஜூன் மாத இறுதி வாக்கிலேயே ரஷ்யாவில் 300,000 பேர் மாண்டுவிட்ட தாக புள்ளிவிவர அமைப்பான ரோஸ்டட் கூறுகிறது.